Showing posts with label World. Show all posts
Showing posts with label World. Show all posts

Sunday, February 9, 2014

ஊருக்குள் யானை வந்தால் சிவப்பு விளக்கு Alert - கோவை சிறப்பு திட்டம்!

கோவை வனக்கோட்டத்தில் வாழும் யானைகள் உணவு, தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் அடிக்கடி நுழைகின்றன. அவை மனிதர்களை தாக்குவதால் உயிர் சேதங்கள் ஏற்படுகிறது. 

16 வயது எய்ட்ஸ் நோயாளி கை நரம்பை வெட்டி தற்கொலை!

மருத்துவமனையில் மூச்சுத்திணறி தவித்தபோது உதவிக்கு ஓடி வந்த தாயை நர்ஸ் தடுத்ததால் 16 வயது எய்ட்ஸ் நோயாளி கை நரம்பை வெட்டி தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா மாநிலம் சிவ்ரியில் உள்ள காசநோய் மருத்துவமனையில் இந்த பரிதாப சம்பவம் நடந்தது. 

Friday, February 7, 2014

கடற்படையை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது இலங்கை அரசு - ஜி.கே.வாசன்

newsகடற்படையை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை அரசு திணறுகின்றது என இந்திய மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மீனவர்கள் பிரச்னைக்கு அடித்தளமாகச் செயல்படுவது இலங்கை அரசுதான். 

தெலங்கானா, தமிழக மீனவர்கள் விவகாரத்தால் 3ம் நாளாக முடங்கிய நாடளுமன்றம்!

தெலங்கானா, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் நேற்றும் 3வது நாளாக முடங்கியது. 

Thursday, February 6, 2014

மனிதனை போல ரோபோவுக்கு மூளை - அமெரிக்க தமிழர் சாதனை!


ரோபோக்களுக்கு மனிதனை போல தன்னிச்சையாக செயல்பட மூளையை கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவில் புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி. 



மகளை கவரும் ஆணுக்கு 65 மில்லியன் டாலர் - தந்தை அதிரடி அறிவிப்பு

d52b5150-70bf-4aa7-a517-c86c5c199f81_S_secvpfஓரின சேர்க்கையாளரான தனது மகளின் மனதை மாற்றி ஒரு அவரை கவர்ந்து திருமணம் செய்யும் ஆணுக்கு பல மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என்று பிரபல தொழிலதிபர் ஒருவர் திடீர் என்று அறிவித்தல் விடுத்துள்ளார். 

விசா கட்டுப்பாட்டால் இரு நாடுகளின் உறவும் பாதிக்கும் - இந்திய தூதர் எச்சரிக்கை!

Untitled-1அமெரிக்காவின் விசா கட்டுபாடுகளால் இரு நாடுகளின் உறவில் பாதிப்பு ஏற்படும்’’ என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் எச்சரித்துள்ளார். 

ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றக் கூண்டில் குற்றவாளியாக நிறுத்த வேண்டும்!

இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.


Wednesday, February 5, 2014

சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் - வாட்டிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா. கண்டனம்

வாட்டிகனில் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதை வாட்டிகன் நிர்வாகம் திட்டமிட்ட முறையில் மறைத்து வருகிறது என ஐ.நா.குற்றம் சாட்டியுள்ளது. சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுவதற்கு, வாட்டிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. 

38 ஆண்டு வரலாற்றில் மூன்றாவது பெருமை - Micro Soft CEOவாக இந்தியர் நியமனம்!

மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஸ்டீவ் பால்மருக்கு அடுத்து, புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்யா நாதெள்ளா நியமிக்கப்பட்டுள்ளார்.

Tuesday, February 4, 2014

சிங்களப் படையினரின் நடவடிக்கையை கண்டித்து பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

இலங்கைப் படையினரின் நடவடிக்கையை கண்டித்து பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 19 பேர் இலங்கைப் படையினரால் சிறை பிடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

ராஜீவ்காந்தி கொலை வழக்கு - 3 பேர் தூக்கை ரத்து செய்ய அரசு எதிர்ப்பு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குத் தண்டனையை குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய கோரும் வழக்கில். உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வாகன்வாதி வாதம் செய்துள்ளார். முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு தூக்கை ரத்து செய்யக் கோரி வாகன்வாதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

வித்தியாசமான காதல் கதை - போர்க்களத்தில் சொன்ன காதல்!

உக்ரேனை சேர்ந்த நபர் ஒருவர், தனது காதலியிடம் மிகவும் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தியுள்ளார். உக்ரேனில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

இறந்த மகனை துண்டு துண்டாக வெட்டிய கொடூர தாய்!

அமெரிக்காவில் இறந்து போன மகனின் உடலை பல துண்டுகளாக வெட்டி, தெருவில் வீசிய தாயால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தைச் சேர்ந்தவர் டான்னா ஸ்கிரிவோ(வயது 59), மருத்துவதாதியாக பணிபுரிகிறார்.


Sunday, February 2, 2014

அமைதியை விரும்பாத சிங்கள அரசு - 19 தமிழக மீனவர் சிறைபிடிப்பு!

தமிழக மீனவர்கள் 19 பேரையும், இவர்களது 5 படகுகளை யும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச்சென்றது ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆழமான காதலை நிரூபிக்க 130 மீற்றர் ஆழத்தில் கரம்பிடித்த ஜோடி!


ஜப்பானை சேர்ந்த ஒரு பெண்ணும், அமெரிக்காவை சேர்ந்த ஒரு வாலிபரும் தங்களுடைய காதலின் ஆழத்தை வெளிப்படுத்துவதற்காக 130 மீட்டர் ஆழத்தில் ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

மொகஞ்சதாரோ பகுதியில் சிந்து மாகாண திருவிழா- தொல்லியல் அறிஞர்கள் கடும் எதிர்ப்பு


சிந்து சமவெளி நாகரிகத்தின் அடையாளமாக திகழும் மொகஞ்சதாரோ பகுதியில், சிந்து மாகாண திருவிழா நேற்று தொடங்கியது. வரலாற்று சிறப்பு மிக்க பகுதியில் விழா நடத்துவதால், பாரம்பரிய சின்னங்களுக்கு ஆபத்து நேரிடும் என்று தொல்லியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவின் முக்கியத் தலைவர்களை சரிகட்ட ஆலோசனை வழங்கிய இடைத்தரகர்!


ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான வழக்கில், பிரதமர் மன்மோகன் மற்றும் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியத்தலைவர்களை அணுகுமாறு இடைத்தரகர் கூறியதாக வெளியாகியுள்ள தகவலால் மீண்டும் இவ்விவகாரத்தில் புயல் வீசத்துவங்கியுள்ளது. 

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு - சிங்கள கடற்படை அட்டூழியம்!


கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 600 தமிழக மீனவர்களை இலங்கை  கடற்படையினர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களை ஊர் திரும்புமாறு விரட்டியதால்  படகு ஒன்றுக்கு ரூ.10,000 அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ராஜிவ்காந்தி கொலை! மர்மங்களும், மறைக்கப்பட்ட உண்மைகளும் - நூல் வெளியீட்டு விழா!


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் செ. துரைசாமி அவர்கள் எழுதிய நூல்களை, சென்னை உயர்நீதிமன்ற மீனாள் நீதிபதி, கே. சந்துரு அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்!