Sunday, February 2, 2014

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு - சிங்கள கடற்படை அட்டூழியம்!


கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 600 தமிழக மீனவர்களை இலங்கை  கடற்படையினர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களை ஊர் திரும்புமாறு விரட்டியதால்  படகு ஒன்றுக்கு ரூ.10,000 அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 




ராமேஸ்வரத்திலிருந்து 600 க்கும் மேற்பட்ட படகுகளில் 2500 க்கும் மேற்பட்ட மீனவர்கள்  மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் இந்திய எல்லையான கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக  மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். 


மேலும் அவர்கள்  மீனவர்களை தாக்கியும் மீன்பிடி உபகரணங்களை வெட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இன்று காலை கரை தி ரும்பினர்.


 கரை திரும்பிய மீனவர்கள் கூறியதாவது: 


ஒவ்வொரு படகுக்கும் 50,000 முதல் 60,000  வரை நஷ்டத்துடன் கரை திரும்பிதாக மீனவர்கள் புலம்பியுள்ளனர். இந்த பிரச்சனை கடந்த 30  ஆண்டுகளாக நடந்த வருகிறது. மேலும் கடந்த 27ம் தேதி இந்தியா&இலங்கை இடையே  பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகும் மீனவர்கள் தங்களுக்கு  விடிவு காலம் பிறக்கவில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர். 


Rameswaram: Who were kaccattivu 600 fishermen fishing near the furore Caused panic Sri Lankan Among the navy. Pushed them back to the city, resulting in the loss of as much as 10,000 fishermen per boat terivikki sources originate. More than 600 boats from Rameswaram fishermen to fish in the sea Have Gone to more than 2500. When they experienced caught fish in the Indian territory Sri Lankan navy kaccattivu varattiyatittanar patrol letting fishermen to catch fish

No comments:

Post a Comment