Sunday, February 2, 2014

இந்தியாவின் முக்கியத் தலைவர்களை சரிகட்ட ஆலோசனை வழங்கிய இடைத்தரகர்!


ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான வழக்கில், பிரதமர் மன்மோகன் மற்றும் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியத்தலைவர்களை அணுகுமாறு இடைத்தரகர் கூறியதாக வெளியாகியுள்ள தகவலால் மீண்டும் இவ்விவகாரத்தில் புயல் வீசத்துவங்கியுள்ளது. 




முக்கிய பிரமுகர்களின் பயணத்திற்காக இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து 3,600 கோடி ரூபாய் மதிப்பில் 12 சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்நிறுவனம் இந்திய தரப்பிற்கு ரூ.360 கோடி கமிஷன் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, மத்திய அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்தது. 


இந்நிலையில் இந்த பேரத்தில் முக்கிய இடைத்தரகராக செயல்பட்ட மைக்ககேல் என்பவர் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய அலுவலகத்திற்காக பணியாற்றிய பீட்டர் புல்லட் என்பவருக்கு எழுதிய கடிதத்தின் நகல் இத்தாலி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அதில் ஹெலிகாப்டர்களுக்கான ஒப்பந்தத்தை பெறுவதற்கு இந்தியாவின் முக்கியத் தலைவர்களை சரிகட்டுமாறு இடைத்தரகர் ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை பெற பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியா, அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பிரணாப் முகர்ஜி, வீரப்ப மொய்லி, வினய்சிங் உள்ளிட்ட தலைவர்களை அணுகுமாறு கடிதத்தில் இடைத்தரகர் மைக்கேல் கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. 


கடிதத்தின் நகலை இந்திய அதிகாரிகளிடமும் இத்தாலி   போலீஸார் அளித்துள்ளனர். 

No comments:

Post a Comment