Thursday, February 6, 2014

விசா கட்டுப்பாட்டால் இரு நாடுகளின் உறவும் பாதிக்கும் - இந்திய தூதர் எச்சரிக்கை!

Untitled-1அமெரிக்காவின் விசா கட்டுபாடுகளால் இரு நாடுகளின் உறவில் பாதிப்பு ஏற்படும்’’ என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் எச்சரித்துள்ளார். 



அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களில் இந்தியர்கள் வேலை செய்கின்றனர். இதனால் அமெரிக்க மக்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைகிறது என்ற குற்றச்சாட்டு அமெரிக்காவில் எழுந்தது. 


இதையடுத்து, வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு வேலை தருவதற்கு கட்டுபாடுகள் விதிக்க வேண்டும், அமெரிக்க மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதன் காரணமாக அமெரிக்காவுக்கு வேலைக்காக வரும் வெளிநாட்டினரின் வேலைக்கான விசா விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர அந்நாட்டின் அரசு முடிவு செய்தது.


இதையடுத்து, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் விசா வழங்குவதற்கான புதிய விதிகள் குறித்து தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தால் தற்காலிகமாக அமெரிக்காவுக்கு வேலைக்கு வருபவர்களுக்கான எச்1பி விசா விதிமுறைகள் கடினமாக்கப்பட்டு உள்ளது. கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அமெரிக்காவுக்கான இந்திய தூதர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கூறுகையில், ‘‘இந்தியாவில் பார்மசி துறையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களு க்கு உலகிலேயே குறைந்த விலைக்கு தரமான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தியா பாடுபடுகிறது. 


ஆனால், பல மருந்துகளின் காப்புரிமைகளை மீறி, இந்தியா அவற்றை உற்பத்தி செய்கிறது என்றும், இதனால் அறிவுசார் காப்புரிமை வாங்குவதற்கு இந்தியா தடையாக, போட்டியாக உள்ளது என்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒர்ரின் ஹாட் தெரிவித்துள்ளது தவறானது. 


அமெரிக்கா எச்1பி விசா நடைமுறைகளில் கொண்டு வந்துள்ள மாற்றங்களால், அமெரிக்கவுக்கு வேலைக்கு வரும் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள். 


இதனால் அமெரிக்க பொருளாதாரமும் பாதிக்கப்படும். அதோடு, இரு நாடுகளின் உறவிலும் பாதிப்பு ஏற்படும். இதேபோல் இந்தியா வரும் அமெரிக்கர்களுக்கான விசாவிலும் கடும் நிபந்தனைகள் கொண்டு வரப்படும்’’ என்றார்.


இந்தியா  அமெரிக்கா உறவில், இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே கைதால் ஏற்கனவே கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது. விசா கட்டுப்பாட்டால் இரு நாடுகளுக் கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Restrictions U.S. visa concerning the impact of the two countries , Indian Ambassador to the U.S. '' Said Subramaniam jeycankar warned .

American Indians are working in different companies . The claim that the decline in employment in the U.S. was raised for the American people .

Subsequently, Exterior to provide employment to impose restrictions on the American people that the American people's representatives insisted on the need to secure employment . For this reason, the United States will work to achieve a change in visa regulations for foreigners working in the country , the government decided .

Consequently, the opposition Republican Party in the U.S. House of Representatives adopted a resolution on the new rules for issuing visas . The decision to work temporarily in the United States regulations for H-1B visas for visitors is katinamakkappattu . Rising rates .

No comments:

Post a Comment