
மூவரின் கருனை மனு காலதாமதமாக நிராகரிப்பை கருத்தில் கொள்ளக் கூடாது. கொலைக் குற்றத்தின் தன்மையை மட்டுமே பார்க்கவேண்டும் எனவும் வாகன்வாதி வாதம் செய்துள்ளார். தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் கோகோய், சிவகீர்த்திசிங் அமர்வு விசாரணை செய்துள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேர் தரப்பில் வழக்கறிஞர் யுகி சவுத்ரி ஆஜராகி வாதம் செய்துள்ளார். தேவையற்ற காலதாமதத்தால் அப்பாவிகள் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் யுகி சவுத்ரி கூறியுள்ளார். 3 பேரும் 30 ஆண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளனர் எனவும் யுகி சவுத்ரி கூறியுள்ளார். இருதரப்பு வாதத்தை கேட்ட 3 நீதிபதி அமர்வு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
No comments:
Post a Comment