Friday, February 7, 2014

தெலங்கானா, தமிழக மீனவர்கள் விவகாரத்தால் 3ம் நாளாக முடங்கிய நாடளுமன்றம்!

தெலங்கானா, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் நேற்றும் 3வது நாளாக முடங்கியது. 



நாடாளுமன்றத்தின் குளிர்கால இறுதி கூட்டத்தொடர் கடந்த புதன்கிழமை தொடங்கியது. தெலங்கானா, தமிழக மீனவர்கள், இடஒதுக்கீடு விவகாரம் போன்றவற்றால் 2 நாட்களாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. 


3ம் நாளான நேற்று காலை மாநிலங்களவை தொடங்கியதும், தெலுங்கு தேச கட்சி எம்பி.க்கள் ஒன்று சேர்ந்து அவையின் மையப்பகுதிக்கு வந்து ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம் வேண்டும் என்று கோஷ மிட்டு அமளியில் ஈடுபட்டனர். ‘ஆந்திராவை காப்பாற்றுங்கள்’ என்று எழு தப்பட்ட பதாகைகளை அவர்கள் கையில் வைத்திருந்தனர். 


இதேபோல், ‘இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்‘ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை திமுக, அதிமுக எம்பி.க்கள் ஏந்தி, கோஷமிட்டும் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். 


இதையடுத்து அவைத் தலைவர் ஹமித் அன்சாரி, அமளியில் ஈடுபட்ட எம்பி.க்களை இருக்கைக்கு சென்று அமரும்படி கேட்டுக் கொண் டார். ஆனால், தொடர்ந்து அமளி நிலவியது. இதனால் அவையை மதியம் வரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். மதியம் மீண்டும் சபை கூடியபோது, தெலுங்கு தேசம், திமுக, அதிமுக எம்பி.க்களின் அமளி தொடர்ந்தது. 


மேலும், பா.ஜ, சமாஜ்வாடி, இடதுசாரி, அகாலிதள கட்சிகளின் எம்பிக்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு பிரச்னைகள் குறித்து கோஷமிட்டபடி அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 


மக்களவையிலும் தெலங்கானா, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கிளப்பி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார். இதனால் 3ம் நாளாக நேற்றும் நாடாளுமன்றம் முடங்கியது.


Today, fishermen attacked by Navy Sri Lanka , including the issues raised by the members were involved in a severe disruption stalled in Parliament yesterday on the third day .

The end of the winter session of Parliament began last Wednesday. Today, fishermen , including issue of shares , Parliament adjourned for 2 days.


Day 3 began yesterday morning in the House the Telugu Desam Party MP . ' S get together and come to the center of the integrated Andhra Pradesh stating that participated in plotting carnage. ' Dona save as holding banners tappatta rise.


Similarly, Sri Lanka Navy attacked the fishermen to find solutions to the problem of " DMK and AIADMK slogans MB . ' S Carrying, songs that have reached the center of the fray involved.


Later, President Hamid Ansari, who was involved in the melee MB . Pals to sit in the seat and listened to Darwin. However, constantly shaken . They also announced the postponement until noon. Council reconvened in the afternoon, Telugu Desam , DMK , AIADMK MP . ' S The uproar continued.


In addition , Bob. J. , Samajwadi Party , Left, SAD party members to meet and go to the essence of the songs of the various issues involved in the fray. Therefore, they adjourned for the day.


Makkalavaiyilum Today, the attack on Tamil Nadu fishermen , including the various issues raised by the members were involved in the melee . Thus, the Speaker of the House announced mirakumar schedule throughout the day . This is the third day yesterday paralyzed parliament.

No comments:

Post a Comment