Friday, February 7, 2014

பூஸாவிற்குள் புகுந்து விளையாடிய அமெரிக்க குழுவினர்!

பூஸா தடுப்பு முகாமிலுள்ள இராணுவ முகாமுக்குள் புகுந்து, அமெரிக்காவின் போர்க் குற்ற நிபுணர் ஸ்ரீபன்ராப் தேடுதல் நடத்தியுள்ளார் எனத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளதாகக் கொழும்பில் இருந்து வெளியாகும் "ஐலண்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.   



இரகசியத் தடுப்பு முகாமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர் அந்த முகாமைச் சல்லடைபோட்டுத் தேடியதாகப் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களை மேற்கோள் காட்டித் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்த, ஸ்ரீபன்ராப் தலைமையிலான அமெரிக்கக் குழுவினர்,முதலில் காலியில் உள்ள பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களைப் பார்வையிடுவ தற்காகச் சென்றிருந்தனர்.   


இதன்போது, பூஸா தடுப்பு முகாமுடன் இணைந்திருந்த இராணுவ முகாம் ஒன்றுக்குள் அவர்கள் திடீரென உள்நுழைந்து  தேடுதல் நடத்தும் பாணியில் பார்வையிட்டுள்ளனர்.    இரகசியத் தடுப்புமுகாம் போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பலர், இன்னமும் எங்குள்ளனர் என்று தெரியாதுள்ளது. 


இவர்கள் இரகசியத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியா கியிருந்தன.   இந்த நிலையில், பூஸா தடுப்பு முகாமுக்கு அருகில் இருந்த படையினரின் முகாமும் அத்தகைய இரகசியத் தடுப்பு முகாமாகப் பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே ஸ் ரீபன் ராப் குழுவினர் அதற்குள் நுழைந்து பார்வையிட்டதாகத் தெரிகிறது.



முறையற்ற செயல் பூஸா தடுப்பு முகாமுடன் இணைந்த இராணுவ முகாமுக்குள், ஸ்ரீபன் ராப் தலைமையிலான குழுவினர் அத்துமீறி நுழைந்ததாக அரச வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன.    அது தடுப்பு முகாமின் பாதுகாப்புக்கான முகாம் என்பதை அமெரிக்க அதிகாரி தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்றும், அமெரிக்காவின் இந்த அணுகுமுறையை இலங்கை அரசினால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.


Boosa detention camp , military camp and the American war crimes expert sripanrap searched the current version , said yullat Colombo to release daily 'La Isla ' reported . Secret detention camp suspected that the camp was searched projection Defense Ministry sources , citing reports were released, according to the report . last January, had visited Sri Lanka , sripanrap led the U.S. team , first empty the detention camp detainees Boosa LTTE members to visit in order to visit . less Boosa detention camp affiliated with the military camp , one of them suddenly enters in search of visitor behavior . secret detention centers last phase of the war the soldiers delivered the principal leaders of the LTTE , many of which are still unknown . were informed of their secret detention centers that have appeared kiyiruntana . these conditions, the Boosa detention camp near the camp of those secret detention of suspected soldiers used rap group Ripan risk , however , comes Visits looks. immoral act Boosa detention camp affiliated with the military camp , Stephen Stamp Robin maiyilana crew trespassed entered government sources blamed ' s . detention protection for camp staff , and the U.S. approach to the Government of Sri Lanka did not understand that the sources said.

No comments:

Post a Comment