Friday, February 7, 2014

கடற்படையை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது இலங்கை அரசு - ஜி.கே.வாசன்

newsகடற்படையை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை அரசு திணறுகின்றது என இந்திய மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மீனவர்கள் பிரச்னைக்கு அடித்தளமாகச் செயல்படுவது இலங்கை அரசுதான். 



மத்திய அரசின் அனைத்து முயற்சியையும் இலங்கை அரசு தடுக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் நமது மீனவர்களை கைது செய்வது ஏற்புடையதல்ல. முதலில் இலங்கை அரசு கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். 


பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை உடனடியாக அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இத்தகைய நல்லநிலை ஏற்படுத்தினால் மட்டுமே இரண்டாவது முறை நடைபெறும் மீனவர் பேச்சுவார்தையில் ஒரு சுமுக முடிவு எட்டப்படும் என அவர் சுட்டிக்காடிக்காட்டியதுடன் மீனவர் பிரச்னையில் மத்திய அரசு தொடாந்து எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு இலங்கை அரசு தாமதமாகச் செயல்படுகிறது. 


தங்களுடைய கடற்படையைக் கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதால் இதில் அவசரமோ ஆத்திரமோ காட்ட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


A medida que el gobierno de Sri Lanka podría ser incapaz de controlar la flota del Índico Ministro de envío GK Vasan Unión dijo . El gobierno de Sri Lanka es la de actuar como la base para la emisión pescadores. Mientras que el gobierno de Sri Lanka para impedir cualquier intento por parte del gobierno federal , una y otra vez , que no está bien para detener a nuestros pescadores . Pescadores por el gobierno de Sri Lanka a que liberen a todos los detenidos en el primer lugar . Deben entregar inmediatamente los barcos confiscados. El gobierno de Sri Lanka ha estado luchando para contener su propia flota . Los medios de vida de los pescadores, ya que el problema no se presenta avacaramo attiramo dijo .

No comments:

Post a Comment