Sunday, February 9, 2014

16 வயது எய்ட்ஸ் நோயாளி கை நரம்பை வெட்டி தற்கொலை!

மருத்துவமனையில் மூச்சுத்திணறி தவித்தபோது உதவிக்கு ஓடி வந்த தாயை நர்ஸ் தடுத்ததால் 16 வயது எய்ட்ஸ் நோயாளி கை நரம்பை வெட்டி தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா மாநிலம் சிவ்ரியில் உள்ள காசநோய் மருத்துவமனையில் இந்த பரிதாப சம்பவம் நடந்தது. 



மும்பை அருகே உள்ள பாந்த்ராவை சேர்ந்த அந்த சிறுவனின் தந்தை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அதன் பின் சோதனை செய்தபோது அவருடைய மனைவி, மகனுக்கும் எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரிந்தது. அதற்காக இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர். சிறுவனின் தாயார் தனது நிலங்கள் அனைத்தையும் விற்று மகனின் சிகிச்சைக்காக ரூ.4 லட்சத்துக்கு மேல் செலவு செய்தார். 


எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகையில் சிறுவனை டிபி நோயும் பாதித்தது. அதனால், சிவ்ரியில் உள்ள டி.பி. மருத்துவமனையில் கடந்த மாதம் சிறுவனை தாயார் சேர்த்தார். டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் சிறுவனின் நிலைமை மிகவும் மோசமடைந்தது. 


கடந்த புதன்கிழமை வழக்கம் போல் மகனுக்கு மருந்துகள் கொடுத்து விட்டு தாயார் வெளியே சென்றார். மருத்துவமனை விதியின்படி ஆண்கள் வார்டில் இரவில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் சிறுவனின் தாயார் வெளியே சென்று விட்டார். அதிகாலை 2 மணிக்கு சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே, செல்போனில் தாயை உதவிக்கு அழைத்தான். பதறிப் போன தாயார், மருத்துவமனை விதிகளை மறந்து மகன் இருந்த வார்டுக்கு ஓடினார். 


அப்போது, வார்டில் பணியில் இருந்த நர்ஸ் அவரை தடுத்து சத்தம் போட்டார். வார்டில் இருந்து வெளியே போகும் படி வற்புறுத்தினார். மகனின் நிலைமையை கண்ணால் பார்த்த தாயால் வெளியே போக மனம் வரவில்லை. அதனால் அவர் நர்சுடன் தகராறு செய்தார். 


அப்போதும் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இத்தனையும் அந்த சிறுவனின் கண் எதிரில் நிகழ்ந்தது. நர்சின் வற்புறுத்தல் காரணமாக சிறுவனின் தாயார் வெளியே சென்றார். அதை பார்த்து வேதனை அடைந்த சிறுவன், தனது வலது கையின் நரம்பை வெட்டினார்.


தாயார் மருத்துவமனைக்கு வெளியில் வந்து பொழுது விடிய காத்திருந்தார். 3 மணி நேரத்துக்குப்பின் சிறுவனின் உயிரைக் காப்பற்ற அவனை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்சில் தனது மகனை ஏற்றிய பிறகே அந்த தாய்க்கு நடந்த விஷயம் தெரிய வந்தது. ஆம்புலன்ஸ் நேராக கேஇஎம் மருத்துவமனைக்கு சென்றது. 


அப்போது மணி காலை 5.30. அங்கு  டாக்டர் வராததால் சிறுவனுக்கு யாரும் சிகிச்சை அளிக்கவில்லை. 12 மணி நேரம் அவன் அப்படியே கிடந்தான். கடைசியில் 3 டாக்டர்கள் வந்து சிறுவனை சோதனை செய்தனர். ஆனால் யாரும் சிகிச்சை அளிக்கவில்லை. மாலை 6 மணியான போது சிறுவனின் மூச்சு நின்றது. 


மகனின் சடலத்தை பார்த்து அந்த தாய் அழவோ அல்லது வேதனைப்படவோ இல்லை. மாறாக தனது மகன் கடந்த 2 வருடமாக பட்ட கஷ்டங்களை கூடி நின்றவர்களிடம் வேதனையுடன் கூறினார்.

Mother, a nurse came running to help prevent suffocation in hospital rocked the 16-year-old AIDS patient committed suicide by cutting his hand vein. Maharashtra State Tuberculosis Hospital in civri this tragedy happened.


No comments:

Post a Comment