Friday, February 7, 2014

கொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர்களுக்கு நினைவுத் தூபி - வட மாகாண சபையிடம் கோரிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர்களுக்காக நினைவுத் தூபியொன்று அமைக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரியுள்ளது.



ஜாதிக ஹெல உறுமய கட்சி, வட மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.


அண்மையில் வட மாகாணசபையில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவுத் தூபி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த தீர்மானங்களில் உள்ளடக்கப்பட்டிருந்தன.


தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட சாம் தம்பிமுத்து, அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், பீ.யோகேஸ்வரம் போன்றோர்களுக்காக நினைவுத் தூபி அமைக்கப்பட வேண்டும். இந்தப் படுகொலைகள் மன்னிக்கப்பட முடியாதவை.


பத்மநாபன், உமாமகேஸ்வரன் உள்ளிட்ட தலைவர்களுக்காகவும் நினைத்தூபி அமைக்கப்பட வேண்டும்.


இது தொடர்பில் வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரியுள்ளது.

No comments:

Post a Comment