Friday, February 7, 2014

மன்னாரில் காலபோகம் பாதிப்பு - கடும் நெருக்கடியில் விவசாயிகள் !

மன்னாரில் 2013 - 2014 காலபோகம் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்படவிருந்த 2013 - 2014ஆம் ஆண்டுக்கான காலபோகம் இம்முறை பருவ மழை பெய்யாமையின் காரணமாக பாதிப்படைந்தள்ளது.




இம்முறை மன்னார், நானாட்டான், முசலி மாந்தை மேற்கு மடு ஆகிய பிரதேசபிரிவுகளுக்கு உட்பட் 12 கமநல சேவை நிலையங்களிலும் 2013 - 2014 காலப்போகம் 20834.4 ஹெக்டரில் நிலப்பரப்பில் செய்வதற்கு தீர்மானிக்கப் பட்டிருந்தபோதும் இம்முறை பருவ மழை பெய்யாமையின் காரணத்தினால் 5616.8 ஹெக்டரிலேயே காலபோகச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. 


இந்நிலையில் தற்பொழுது 385 ஹெக்டர் விவசாயம் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் 337 குடும்பங்கள் இதனால் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் இத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என விவசாயிகள் தெரிவிப்பதாகவும் மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

No comments:

Post a Comment