
ஜப்பானை சேர்ந்த ஹிரோயுகி யோஷிதா தனது அமெரிக்க காதலர் சாண்ட்ரா ஸ்மித்தை வித்தியாசமான முறையில் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். இருவரும் நீச்சல் வீரர்கள் என்பதால் ஆழ்கடலில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். தனது பயிற்சியாளரிடம் இந்த ஆசையை இவர்கள் கூறியபோது, அவர் இதை ஏற்றுக்கொண்டு, தானே இந்த திருமணத்தை நடத்தி வைப்பதாக கூறினார்.
தாய்லாந்து நாட்டில் 130 மீட்டர் ஆழத்தில் உள்ள ஒரு குகையில் மணமகணும் மகளும், திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தை இவர்களது பயிற்சியாளர் சிறப்புடன் நடத்தி வைத்தார். மணமகள் தோழி ஒருவரும், மணமகன் தோழர் ஒருவரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
ஐந்து பேர்களும் ஆழ்கடலில் ஆக்சிஜன் வாயுக்கருவிகளை பொருத்தி சுமார் மூன்று மணிநேரம் ஆழ்கடலில் இருந்தனர். திருமணம் முடிந்தவுடன் காதலர்கள் இருவரும் ஆழ்கடலில் ஆக்சிஜன் கருவியை கழட்டிவிட்டு, ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொண்டனர்.
உலகிலேயே ஆழமான பகுதியில் நடந்த திருமணமான இவர்களது திருமணம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment