Sunday, February 2, 2014

பெண் ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை - சந்தேகநபர் கைது


பெண் ஊடகவியலாளர் மெல் குணசேகர நேற்று காலை அவரது வீட்டில் வைத்து கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்ய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.




குறித்த ஊடகவியலாளர் மெல் குணசேகர பாத்த்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.


இவர் காலை 6.15 க்கும் 8.15 க்கும் இடைப்பட்ட நேரத்தில் கொலை செய்ய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


குறித்த கொலை தொடர்பில் நேற்று கைரேகை ஆய்வாளர்கள், போலீஸ் மோப்ப நாய்கள் சகிதம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். வீட்டிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வுக்கு உட்படுத்தபட்டிருந்தது.


நுகேகொட மிரிகான குற்ற தடுப்பு அதிகாரியின் தலைமையில் தேடல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


இந்நிலையிலயே நேற்று மாலை குறித்த சந்தேக நபர் கைது செய்ய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து மெல் குணசேகராவின் கைத்தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment