Wednesday, February 5, 2014

38 ஆண்டு வரலாற்றில் மூன்றாவது பெருமை - Micro Soft CEOவாக இந்தியர் நியமனம்!

மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஸ்டீவ் பால்மருக்கு அடுத்து, புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்யா நாதெள்ளா நியமிக்கப்பட்டுள்ளார்.




கம்ப்யூடர் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் லினெக்ஸ், ஆப்பிள் மேக் போன்றவை இருந்தாலும், மைக்ரோசாப்ட் அளவுக்கு எதுவுமே பிரபலமாகவில்லை. கம்ப்யூட்டர் பயன்படுத்துவோருக்கு எளிதான, உலக அளவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுவது மைக்ரோசாப்ட்டாகத் தான் உள்ளது. 


மைக்ரோசாப்ட் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பில்கேட்சுக்கு பிறகு ஸ்டீவ்பால்மர் அந்த இடத்தை பிடித்தார். தற்போது 3வதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்யா நாதெள்ளா சி.இ.ஓ (தலைமை செயல் அதிகாரி) பொறுப்பை ஏற்றுள்ளார்.


சத்யா நாதெள்ளா (46) ஐதராபாத்தை சேர்ந்தவர். பெகும்பேட்டில் உள்ள ஐதராபாத் பப்ளிக் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர். மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.இ. படித்துள்ளார். அதன்பிறகு, அமெரிக்காவில் எம்பிஏ படித்தார். பின்னர் 1992ம் ஆண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். 


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் சேமிப்பு தளத்திலும், என்டர்பிரைஸ் பிரிவுகளில் இவர் பணியாற்றியுள்ளார். பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளார். 2011ம் ஆண்டு கிளவுட் சேவை இவரது தலைமையில் கீழ் இயங்க தொடங்கியது. 2013ம் ஆண்டில் அதன் லாபம் 20.3 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதற்கு இவரது வழிநடத்தல்தான் காரணம் என கூறுகின்றனர். பதவி கிடைத்தது பற்றி சத்யா கூறுகையில், ‘உலகத்தையே மாற்ற வேண்டும் என்ற எண்ணம் பல நிறுவனங்களிடம் இருந்தாலும், சிலவற்றுக்குதான் அதை செயல்வடிவமாக்கும் திறன் உள்ளது. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அந்த திறன் உள்ளது. அத்தகைய நிறுவனத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பதவி, எனக்கு கிடைத்த கௌரவம்‘ என்று கூறியுள்ளார்.


சத்யாவின் தந்தை பி.என்.யுகாந்தர் ஐஏஎஸ் அதிகாரி. இவர் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது அவரது சிறப்பு செயலாளராக பணியாற்றியவர். பின்னர் திட்ட கமிஷன் உறுப்பினராக இருந்தார். சத்யா நாதெள்ளாவுக்கு அனுபமா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். மைக்ரோசாப்ட் CEOவாக இருந்த ஸ்டீவ் பால்மர் ஓய்வுபெறப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து, இந்த பதவிக்கு ஸ்கைப் நிறுவன முன்னாள் தலைவர் டானி பேட்ஸ், நோக்கியா முன்னாள் தலைவர் ஸ்டீபன் எலோப் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. 


இந்த பதவிக்கு இந்தியர்களில் இவருக்கும் தமிழகத்தை சேர்ந்த கூகுள் நிறுவன துணை தலைவர் சுந்தர் பிச்சை ஆகியோரிடையே போட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல், மைக்ரோசாப்ட் நிறுவன புதிய தலைவராக ஜான் தாம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 38 ஆண்டு வரலாற்றில் 3வதாக இந்தியர் ஒருவர் இந்த பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


சிகரத்தில் இந்தியர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மட்டுமின்றி பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களிலும் தலைமை பதவிகளில் (சிஇஓ) இந்தியர்கள் கொடிகட்டி பறக்கின்றனர். அவர்கள் பற்றிய விவரங்கள்:


இந்திரா நூயி  பெப்சி கம்பெனி மதிப்பு ரூ.3,96,000 கோடி

அன்ஷு ஜெயின்  டட்ச் வங்கி ரூ2,58,000 கோடி

இவான் மெனசெஸ்  டியாஜியோ ரூ1,08,000 கோடி

ராகேஷ் கபூர்  ரெக்கிட் பென்கிசர் ரூ9,60,000 கோடி

அஜித் ஜெயின்  பெர்க்ஷயர் ஹாத்வே குழுமம் ரூ60,000 கோடி

அஜய் பங்கா  மாஸ்டர் கார்டு ரூ42,000 கோடி

பியுஷ் குப்தா  டிபிஎஸ் குழுமம் ரூ36,000 கோடி

சஞ்சய் மெஹ்ரோத்ரா  சான் டிஸ்க் ரூ30,000 கோடி

சஞ்சய் ஜா  குளோபல் ஃபவுண்டரீஸ் ரூ30,000 கோடி

சாந்தனு நாராயண்  அடோப் ரூ24,000 கோடி

தினேஷ் பாலிவால்  ஹர்மன் இன்டர்நேஷனல் ரூ24,000 கோடி

ராஜீவ் வாசுதேவா  ஈகான் ஜெண்டர் ரூ4,200 கோடி

இந்திய ஐடி நிறுவனங்களின் சிஇஓக்கள் சம்பளம்:

சத்ய நாதெள்ளா (மைக்ரோசாப்ட்) ரூ.7.5 கோடி

என்.சந்திரசேகரன்  டிசிஎஸ் ரூ.11.6 கோடி

வினீத் நாயர்  எச்சிஎல் ரூ.8.42 கோடி

அசோக் வேமுரி  ஐகேட் ரூ.8.17 கோடி

பாலு கணேஷ் அய்யர்  எம்பசிஸ் ரூ.7.45 கோடி

டி.கே.குரியன்  விப்ரோ ரூ.6.13 கோடி


English : Microsoft CEO Steve Ballmer , who was the successor has been appointed the new Chief Executive Officer of Indian origin, Satya natella .


Lineks Computer operating system , Apple Mac , but Microsoft has not become as popular as anything . Easy to computer users in the world 's most widely used is the Microsoft .


Microsoft founder and chief operating officer after pilketc stivpalmar the spot . No.3 is currently the CEO of Indian origin, Satya natella ( Chief Executive Officer ) has accepted responsibility .


Satya natella ( 46 ) belonged to Hyderabad . Pekumpet completed schooling at Hyderabad Public School . Later . Manipal Institute of Technology eager Studies. Thereafter, he studied MBA in the United States . Micro- Soft in 1992 and then went to work for the company .


Microsoft's cloud storage platform , he has worked in the enterprise sector . School , college enthusiastically participated in the study of cricket . Cloud service began operating in 2011 under his leadership . In 2013, its profit rose to $ 20.3 billion . The Alaska valinatattaltan blame . About gaining the Sathya said , " the desire to change the world for many companies , cilavarrukkutan ceyalvativama it is capable of . There is the potential that the Microsoft Corporation . In such company, as given to me , to my honor , "he said .


Satya P. 's father . Mine . Yukantar IAS officer . He was prime minister PV Narasimha Rao served as his special secretary . He was a member of the Planning Commission . Satya natella have 3 children and his wife Anupama . Microsoft CEO Steve Ballmer oyvuperappovat was announced , the former head office of Skype Tony Bates , former head of Nokia Stephen Elo names were recommended .


The position of the Indians from Tamil Nadu, he noted there was competition between Google Vice President Sundar begging . Like this , John Thompson has been named the new head of Microsoft's enterprise . Microsoft's 38 -year history of the Indian No.3 person appointed to this position is significant .


Several multinational companies not only Indians in top leadership positions at Microsoft Corporation ( CEO ), India 's flagship acts . Details about them :


Indra Nooyi of Pepsi company worth Rs crore .3,96,000

Ansu Rs 2,58,000 crore Jain, Deutsche Bank

Ivan menaces Rs 1,08,000 crore tiyajiyo

Rakesh Kapoor , Reckitt penkicar Rs 9,60,000 crore

Ajit Jain, Berkshire Hathaway Company Rs 60,000 crore

Ajay Banga , Master Card Rs 42,000 crore

Piyush Gupta, DBS Group Rs 36,000 crore

Sanjay mehrotra San Disk Rs 30,000 crore

Sanjay Jha Global hpavuntaris Rs 30,000 crore

Shantanu Narayan Adobe Rs 24,000 crore

Harman International's Rs 24,000 crore by Dinesh Bali

Rajeev Vasudeva ikan Gender Rs 4,200 crore

Indian IT companies ciiokkal Salary :

Satya natella ( Microsoft ) Rs .7.5 million

My . Chandrasekaran, TCS Rs .11.6 million

Vineet Nayar HCL Rs .8.42 crore

Ashok vemuri aiket Rs .8.17 crore

Balu Ganesh Iyer Rs .7.45 crore MphasiS

TK Kurien , Wipro Rs .6.13 crore

No comments:

Post a Comment