Thursday, February 6, 2014

இலங்கை கடற்படையின் அட்டூழியம் - இராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் கடலில் தடுத்து வைப்பு!

கச்சதீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை புதன்கிழமை காலையில் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களிடம் நடுக்கடலில் விசாரணை நடைபெற்றது. 24 மணி நேரம் கழித்து அவர்களை எச்சரித்து விடுவித்தனர்.




இராமேஸ்வரம் பகுதியிலிருந்து புதன்கிழமை காலையில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.


கச்சதீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு காலை 9 மணிக்கு வந்த இலங்கைக் கடற்படையினர், 15 மீனவர்களை சிறை பிடித்தனர்.


மீனவர்களை பகல் முழுவதும் விசாரணை செய்து இரவு 11 மணிக்கு விடுவித்துள்ளனர். உயிருக்கு பயந்த மீனவர்கள் மீன்பிடிக்காமல் திரும்பி வந்து சேர்ந்தனர்.


பாதிக்கப்பட்ட மீனவர் அர்த்தனாஸ் கூறியதாவது:


நாங்கள் புதன்கிழமை காலையில் கச்சதீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அந்தப் பகுதியில் காலை 9 மணிக்கு இரண்டு படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் எங்கள் படகையும், கான்ஸ் என்பவரின் படகையும் சேர்த்து 15 மீனவர்களையும் சிறை பிடித்தனர்.


பகல் முழுவதும் விசாரணை என்ற பெயரில் நடுக்கடலில் நிறுத்தி வைத்தனர். எங்களிடம் மைக்கை கொடுத்து அப் பகுதியில் மீனபிடிக்க வந்த மற்ற படகுகளை வரக்கூடாது என எச்சரிக்கச் சொன்னார்கள்.


எங்களை இரவு 11 மணிக்கு விடுவித்து, இனிமேல் இந்தப் பகுதிக்கு மீன்பிடிக்க வரக்கூடாது எனவும், இரட்டைமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் எச்சரித்து அனுப்பினர்.


நாங்கள் வியாழக்கிழமை அதிகாலையில் இராமேஸ்வரம் வந்து சேர்ந்தோம். இதனால் எங்களுக்கு ரூ.80 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டது என மீனவர்கள் தெரிவித்தனர்.


Kachchathivu Rameswaram fishermen who were fishing in the sea area of ​​Sri Lanka Navy seized 15 people Wednesday morning. They were investigated at sea. Published 24 hours later , he said.

On Wednesday morning from Rameshwaram 500 - fishermen fishing in the sea boat passed .

Kachchathivu while fishing in the area where the Sri Lankan Navy at 9 am , 15 fishermen detained in prison.

Throughout the trial , published at 11 pm the day of the fisherman. Fearing for the lives of the fishermen returned minpitikkamal .

Another victim said arttanas :

Kachchathivu Wednesday morning were fishing in the maritime area . Two boats in the area at 9 am at the Sri Lankan navy on our boat , the boat along with 15 fishermen and prisoners held by the Contras.

Throughout the day , as the investigation had stopped in the middle of the sea. Give us a microphone minapitikka the other boats in the area told me warn you not to.

11 hours, which frees us , which should be no fishing in this area , it should not be used as a warning sent irattaimati networks.

Rameshwaram arrived in the early hours of Thursday . The fishermen told us that there was a loss of up to Rs

No comments:

Post a Comment