Thursday, January 30, 2014

நான் கடவுளிடம் சென்று சொல்லப் போகிறேன் - பதற வைக்கும் சிறுவனின் இறுதி வார்த்தை

“நான் கடவுளிடம் சென்று எல்லாவற்றையும் சொல்லப் போகிறேன்” என்ற மூன்று வயது சிறுவனின் கடைசி வார்த்தை அனைவரின் மனதையும் பதற வைத்துள்ளது.





சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டங்கள் நடந்து வருகிறது.


இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியானதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.


பெண்கள், குழந்தைகள் என பாராது அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளனர்.


சமீபத்தில் மிக கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர்களின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்நிலையில் தற்போது மூன்று வயது சிறுவன் ஒருவனின் புகைப்படம் அனைவரின் மனதையும் உருக வைத்துள்ளது.


மக்களின் வலியையும், அவர்களது கஷ்டங்களையும், துயரங்களையும் எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றது.


இதற்கிடையே மக்களோடு மக்களாக இணைந்து அல்கொய்தா தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment