கடலில் படகுடன் அடித்துச் செல்லப்பட்டவர் 16 மாதங்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மெக்சிகோ நாட்டிலிருந்து எல் சால்வேடர் தீவுக்கு கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பரில் ஜோஸ்இவான் என்பவர் தன் நண்பருடன் சென்றிருந்தார்.
அப்போது திடீரென படகின் சுழல் இறக்கை உடைந்ததால் நடுக்கடலில் நின்றுவிட்டது, பிறகு 12,500 கி.மீ தொலைவில் உள்ள இபான் பவளப்பாறை தீவிற்கு மெல்ல மெல்ல மிதந்து சென்றது.
அங்கு சில மாதங்களில் இவானின் நண்பர் இறந்து விட்டதால், தன்னந்தனியாக மாட்டிக் கொண்டார்.
அங்கிருந்த ஆமை, பறவைகளை உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் அவ்வழியாக படகில் வந்த இருவர் இவானை கண்டு மீட்டுள்ளனர்.
ஸ்பெயின் மொழி பேசும் ஜோஸ், விரைவில் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட உள்ளார்.
No comments:
Post a Comment