Friday, January 31, 2014

இலங்கையை தமிழர் ஆட்சி செய்வதென்பது முடியாதது - கையாலாகாதவர் தகவல்!


தமிழர் ஒருவர் ஜனாதிபதியானால் எக் காலத்திலும் இலங்கையை ஆட்சி செய்ய முடியாது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். 






மேலும் இலங்கையின் சனத்தொகையில் 100 வீதத்தில் 18 வீதமானவர்களே தமிழ் மக்கள். இவ்வாறான ஓர் நிலைமையில் எக்காலத்திலும் தமிழர் ஜனாதிபதியாக ஆட்சி வகிப்பது நடைமுறைச்சாத்தியமற்ற விடயமாகும்.

போர்க் குற்றச் செயல் விசாரணை குறித்து கோருவதன் மூலம் இலங்கை இன்னும் நெருக்கடிகளையே எதிர்நோக்க நேரிடுகின்றது. புலிகள் அமைப்பு எவரையம் பாவம் பார்க்கவில்லை. இவ்வாறு இருக்கையில் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக எவ்வாறு குற்றம் சுமத்தப்பட முடியும். எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் இம்முறை ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவை மாநாட்டுக்கு பங்கேற்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment