அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பல்கள் வருவதில்லை எனவும் அவ்வாறு கப்பல்கள் வந்தால் அதனை செய்தியாக வெளியிடுவார்கள் எனவும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
காலி, அக்மீமன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பல்கள் வருவதில்லை. கப்பல்கள் வந்ததால் அது செய்தியாகும்.
துறைமுகத்திற்கு கப்பல் வந்தால் அது எப்படி செய்தியாக முடியும். விமானங்கள் வந்தால் செய்தியாக வெளியிடலாம்.
துறைமுகத்திற்கு கப்பல்கள் வருவது அரிது இதன் காரணமாகவே கப்பல் ஒன்று வந்தால் அதனை செய்தியாக வெளியிடுகின்றனர்.
மக்களுக்கு பல்வேறு பொருட்களை விநியோகித்து அவர்களின் வாக்குகளை கொள்ளையிடும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
கடனை வாங்கி நாட்டை அபிவிருத்தி செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. அரசாங்கம் நாட்டில் எந்த அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளது?.
மத்தளயில் விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அங்கு விமானங்கள் இல்லை. விமானங்களுக்கு பதிலான மயில்கள் பறக்கின்றன.
இலங்கை பொறியிலாளர்களும் தொழிலாளர்களும் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்கின்றனர். சீனா மேலோட்டமாக செயற்படுகிறது.
ஆனால் சீனா இந்த அபிவிரு்திக்காக கடனை கொடுத்து விட்டு, அபிவிருத்திட்டங்களை மேற்கொள்ளும் ஒப்பந்தகளை பெற்று மீண்டும் பணத்தை தனது நாட்டுக்கு எடுத்துச் செல்கிறது.
No comments:
Post a Comment